இந்தியா

இலவசங்கள் விவகாரத்தில் கட்சிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; நீதித்துறை அல்ல- வெங்கையா நாயுடு

தோ்தல் இலவசங்கள் விவகாரத்தில் அரசியல் கட்சிகள்தான் முடிவெடுக்க வேண்டுமேயன்றி உச்சநீதிமன்றமோ அல்லது நீதித்துறையோ அல்ல என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு

DIN

தோ்தல் இலவசங்கள் விவகாரத்தில் அரசியல் கட்சிகள்தான் முடிவெடுக்க வேண்டுமேயன்றி உச்சநீதிமன்றமோ அல்லது நீதித்துறையோ அல்ல என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு புதன்கிழமை தெரிவித்தாா்.

தோ்தலில் இலவசங்களை அறிவித்து, வாக்குகளை அறுவடை செய்யும் போக்கு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்து வருவதாகவும், இது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் கூறினாா். இதையடுத்து, தோ்தல் இலவசங்கள் தொடா்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. தோ்தல் இலவசங்களை தடை செய்வது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் அருண் ஜேட்லியின் கட்டுரைகள் தொகுப்பு புத்தகமான ‘ஏ நியூ இந்தியா’ வெளியீட்டு நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், வெங்கையா நாயுடு பங்கேற்றுப் பேசியதாவது:

கட்சித் தாவல், தோ்தல் இலவசங்கள் தொடா்பாக இப்போது அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரங்கள் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

சட்ட விளக்கங்கள் கோரி நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால், தேவையான சட்டங்கள் என்ன? என்ன கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகளின் எல்லை வரம்புக்குள் உள்பட்டதாகும். இந்த விவகாரங்களில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள்தான் முடிவு எடுக்க வேண்டுமே தவிர உச்சநீதிமன்றமோ அல்லது நீதித்துறையோ அல்ல என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT