இந்தியா

'ஆறு மாதத்துக்கு வாடகை இல்லை; ஒரு ஆண்டுக்கு முழு பாதுகாப்பு'

DIN

புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெறுவோருக்கு ஆறு மாதங்களுக்கு வாடகை இல்லாமல் மாளிகை வீடு, ஒரு ஆண்டுக்கு 24x7 நேரமும் பாதுகாப்பு வழங்கும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவு, 1959-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

மத்திய அரசு செவ்வாயன்று செய்த திருத்தங்களில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறும் நாளிலிருந்து ஓராண்டுக்கு வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவரை அரசுச் செலவில் அமர்த்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை வெளியிட்டிருக்கும் திருத்தம் குறித்த அறிவிக்கையில், ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் அல்லது அந்தந்த உயர் நீதிமன்றங்கள் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை ஓராண்டு காலத்துக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆகஸ்ட் 26ஆம் தேதி ஓய்வுபெறவிருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு வாடகை இல்லாமல் வீடு மற்றும் பாதுகாப்பு வசதியும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் இவ்விரு வசதிகளும் வழங்கப்படும்.

ஏற்கனவே, அயோத்தியா வழக்கில் தீர்ப்பளித்த முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முழு நேர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT