இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாளையுடன் ஓய்வு

DIN

உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாளையுடன்(ஆக.26) ஓய்வு பெறுகிறார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக 2014ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் என்.வி.ரமணா, 24 ஏப்ரல் 2021 முதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 26-ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணிமூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த தலைமை நீதிபதி யாா் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது.

அதன்படி, நீதிபதி யு.யு.லலித் பெயரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்த நிலையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி யு.யு.லலித், மூன்று மாதங்களுக்கு குறைவாக மட்டுமே தலைமை நீதிபதி பதவியை வகிப்பாா். அவா் வரும் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT