இந்தியா

பெகாஸஸ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பெகாஸஸ் உளவு விவகார வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு இன்று விசாரிக்க உள்ளனர்.

DIN

பெகாஸஸ் உளவு விவகார வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு இன்று விசாரிக்க உள்ளனர்.

இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் நியமித்தது. அந்தக் குழுவில், தொழில்நுட்ப நிபுணா், நீதிபதி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

தொழில்நுட்பக் குழுவானது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT