முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 40 நிமிடத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 40 நிமிடத்தில் இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 40 நிமிடத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 40 நிமிடத்தில் இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 40 நிமிடத்தில் இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், 

வெள்ளிக்கிழமை அதிகாலை 3.28 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையம் ஜம்மு பகுதியில் உள்ள கத்ரா பகுதிக்கு வடகிழக்கே 62 கி.மீ தொலைவில் இருந்ததாகவும், இது ரிக்டர் அளவில் 3.4 கி.மீ அலகாகவும் பதிவானது. 

இந்த நிலநடுக்கம் வடக்கு 33.17 டிகிரி அட்சரேகையிலும், கிழக்கே 75.57 டிகிரி தீர்க்கரேகையிலும் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்து, தோடா மாவட்டத்தில் அதிகாலை 4.07 மணிக்கு ஏற்பட்டது. தோடா பகுதியிலிருந்து வடக்கே 10 கீ.மீ தொலைவில் இருந்ததாக தெரிவித்தனர். 

இது ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் வடக்கு 33.23 டிகிரி அட்சரேகையிலும், கிழக்கே 75.56 டிகிரி தீர்க்கரேகையிலும் 10 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது. 

கடந்த நான்கு நாள்களில் யூனியன் பிரதேசத்தின் கத்ரா, தோடா, உதம்பூர் மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் 11 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கங்களால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →