இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு

DIN

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று (சனிக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். 

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். 

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள யு.யு.லலித்(உதய் உமேஷ் லலித்) 74 நாள்கள் மட்டுமே பதவியில் இருப்பார், வருகிற நவம்பர் 8 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். 

நீதித்துறையில் வெளிப்படைத் தன்மை, வழக்குகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை இவர் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது. 

முன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பணிக்காலம் நேற்றுடன் (ஆக.26) முடிவடைந்தது. கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். 

என்.வி. ரமணா ஓய்வு காரணமாக, உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒருநாள் அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT