ரங்கநாதன் தெரு போல காட்சியளிக்கும் திஹார் சிறை 
இந்தியா

ரங்கநாதன் தெரு போல காட்சியளிக்கும் திஹார் சிறை

திகார் சிறைச்சாலை வளாகம், அனுமதிக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகமான சிறைக் கைதிகளால் நிரம்பி வழிகிறது.

DIN


புது தில்லி: மிக முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்கள் பலரும் அடைக்கப்பட்டிருக்கும் திகார் சிறைச்சாலை வளாகம், அனுமதிக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகமான சிறைக் கைதிகளால் நிரம்பி வழிகிறது.

சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதால், பராமரிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை முறையாகச் செய்ய முடியாமல் சிறைத் துறையினர் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர் என்கிறது தகவல்கள்.

திகார் சிறைச்சாலையில் கூட்டம் அதிகமாக இருப்பதால், அதனைக் குறைக்க அருகிலேயே ரோஹிணி மற்றும் மண்டோலி சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. ஆனால் காலப்போக்கில் அவற்றுக்கும் இதே நிலைதான். தில்லியில் இந்த மூன்று சிறைகளும் அடங்கிய சிறை வளாகத்தை மத்திய சிறைச்சாலை என்கிறார்கள்.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, அளிக்கப்பட்ட தகவலில், திகார் சிறை, உலகிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை என்று அறியப்படுவது. இதில் 5,200 சிறைக்கைதிகள் அடைக்கப்படலாம். ஆனால் இங்கு அடைக்கப்பட்டிருப்பது 13,183 கைதிகள்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே சிறைக் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சிறைச்சாலையில் அவ்வப்போது சிறு சிறு தகராறுகள் ஏற்படுகின்றன. கூட்டம் அதிகமாக இருப்பதால் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் எழுகிறது என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT