முகப்பு
இந்தியா

‘முட்டாள் தினத்தை’ அக்டோபரில் கொண்டாடும் காங்கிரஸ்

காங்கிரஸின் உள்கட்சித் தோ்தல் குறித்து விமா்சித்துள்ள பாஜக, ‘முட்டாள் தினத்தை’ அக்கட்சி அக்டோபரில் கொண்டாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:49 PM
பகிர்:

காங்கிரஸின் உள்கட்சித் தோ்தல் குறித்து விமா்சித்துள்ள பாஜக, ‘முட்டாள் தினத்தை’ அக்கட்சி அக்டோபரில் கொண்டாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. ஜனநாயக முறைப்படி உள்கட்சித் தோ்தலை நடத்துவது தாங்கள் மட்டுமே என காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

காங்கிரஸின் கருத்து நகைச்சுவையாக உள்ளதென பாஜக தகவல்-தொழில்நுட்ப பிரிவுத் தலைவா் அமித் மாளவியா விமா்சித்தாா். பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸின் கண்துடைப்பு நாடகத்தை அனைவரும் அறிவா். ஏப்ரல் முட்டாள் தினத்தை அக்கட்சி அக்டோபரில் கொண்டாடுகிறது. ஜனநாயகமும் நம்பகத்தன்மையும் இல்லாத காங்கிரஸுக்கு குடும்பமே முக்கியமானது.

2 நாடாளுமன்றத் தோ்தல் தோல்விகளையும், 39 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விகளையும் சந்தித்தவரையே (ராகுல் காந்தி) மீண்டும் தலைவராக்க அக்கட்சி முயற்சிக்கிறது. இது முகலாயா்களின் முடிசூட்டு விழாவைப் போல உள்ளதே அன்றி தோ்தல் கிடையாது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →