இந்தியா

திரிணமூல் பொதுச் செயலருக்கு அமலாக்கத்துறை சம்மன்

DIN

நிலக்கரி ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நிலக்கரி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது. தொடர்ந்து, அமலாக்கத்துறையும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜிக்கு நெருங்கியவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி அபிஷேக் பானர்ஜி நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT