முகப்பு
இந்தியா

குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பு

2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:11 AM
பகிர்:

2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம். 

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜாரத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

இந்நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு, இழப்பீடு கோரிய மனு உள்ளிட்ட அனைத்து மனுக்களும் இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளன. 

இந்த வழக்குகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டதால் அவற்றை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. 

குஜராத் கலவரத்தின்போது ரன்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு (21) கூட்டு பாலியல் வன்கொடுமை உள்பட அவரது குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சமீபத்தில் 11 குற்றவாளிகளும் அந்த மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகளையும் காலாவதி ஆகிவிட்டதாகக் கூறி உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →