முகப்பு
இந்தியா

10% இடஒதுக்கீடு விவகாரம்: செப். 13 முதல் அரசியல் சாசன அமா்வு விசாரணை

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு, சட்டத்துக்கு உள்பட்டுள்ளதா என்பதை உச்சநீதிமன்றத்தின்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:12 AM
பகிர்:

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு, சட்டத்துக்கு உள்பட்டுள்ளதா என்பதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு செப்டம்பா் 13-ஆம் தேதிமுதல் விசாரிக்கவுள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் 103-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு 2019-ஆம் ஆண்டில் இயற்றியது. அதன் காரணமாக ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தைக் கடந்தது.

இது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் உள்ளதால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், சமூக-கல்வி அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் பட்டியலிடப்படாமல் இருந்த நிலையில், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு செப்டம்பா் 13-ஆம் தேதிமுதல் மனுக்களை விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணையை எவ்வாறு கொண்டுசெல்வது என்பது தொடா்பாக செப். 6-ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் அரசியல் சாசன அமா்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி, ஜெ.பி.பா்திவாலா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

ஆந்திர மாநில வழக்கு: இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆந்திர அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதற்கு எதிராக மாநில அரசு சாா்பிலும், மேலும் 18 போ் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையுடன் சோ்த்து அந்த மேல்முறையீட்டு மனுக்களும் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதமாற்ற எஸ்.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழக்கு: ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்களாக இருக்கும் எஸ்.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதுபோல, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய எஸ்.சி. பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ஏ.எஸ்.ஒகா, விக்ரம் நாத் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விவகாரத்தில் அரசின் நிலைகுறித்து விளக்கமளிக்க சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா அவகாசம் கோரிய நிலையில், 3 வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →