இந்தியா

ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடையில்லை: கர்நாடக உயர் நீதிமன்றம்

DIN

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேவுள்ள சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை கோரிய மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேவுள்ள சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்த கர்நாடக அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 

சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கர்நாடக அரசு கடந்த 26ஆம் தேதி அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து வக்ஃபு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.எம்.சுந்தரேஷ், ஏ.எஸ்.ஓகா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈத்கா மைதானத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என அறிவித்தது. 

இந்த மைதானத்தை இஸ்லாமியர்களின் பண்டிகைகளை கொண்டாடவும், மற்ற நேரங்களில் விளையாட்டுத் திடலாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி இடைக்கால உத்தரவில் தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இருப்பினும், மாநில அரசு சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பின்னர், இரண்டு ஏக்கர் நிலத்தில் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கர்நாடக உயர் நீதி மன்றம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடை கோரிய மனுவை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT