இந்தியா

நட்டாவுக்கு அடுத்து பாஜக தலைவர் யார்?

DIN

ஜே.பி.நட்டாவிற்குப் பின் பாஜகவின் அடுத்தத் தலைவராக தர்மேந்திர பிரதான் தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காங்கிரஸில் அக்டோபர் மாதத்திற்குள் கட்சியின் புதிய தலைவரைத் தேர்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவின் தற்போதைய தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக்காலமும் 2023, ஜனவரி மாதம் நிறைவடைய உள்ளது.

இதனால், பாஜக நட்டாவின் பதவிக்காலத்தை மீண்டும் நீட்டிக்கவில்லை என்றால் புதிய தலைவராக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் தேசிய தலைவர் அதிகபட்சமாக இரண்டு முறை தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்பதால் நட்டாவின் பதவி நீட்டிப்பு குறித்து இரண்டு யோசனைகள் உலவுகின்றன. அடுத்த பொதுத் தேர்தல் வரை ஒரு ஆண்டு அல்லது முழுமையாக மூன்றாண்டு பதவிக்காலம். 

இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர், ‘நட்டாவின் தலைவர் பொறுப்பை கட்சி அடுத்த தேர்தல் வரை நீட்டிக்கவில்லையென்றால் புதிய தலைவராக தர்மேந்திர பிரதான் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும், இப்பதவிக்கு பூபேந்திர யாதவ் பெயரும் அடிபடுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், நட்டாவின் பணிகள் திருப்திகரமாக இருந்துள்ளதாகவும் அவரின் தலைமையில் பல மாநிலங்களில் பாஜகவிற்கு முன்னேற்றம் கிடைத்துள்ளன என்றும் மற்றொரு தலைவரும் கூறியுள்ளார்.

ஆனால், மீண்டும் 3 ஆண்டு பதவி ஜே.பி.நட்டாவுக்கு வழங்கப்படவில்லை என்றால் கட்சியை ஒருங்கிணைப்பதில் திறனும் அனுபவமும் கொண்ட  ஏபிவிபி-யில் இணைந்து மாணவப் பருவத்திலிருந்து  பாஜகவின் தீவிர உழைப்பாளியாக இருக்கும் தர்மேந்திர பிரதானுக்கு தலைவர் பொறுப்புக் கிடைக்கும் என்றே கருதுகிறார்கள்.

அதற்குக் காரணம், முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பார்வையில் பிரச்னைகளைத் தீர்ப்பவரகவே பிரதான் இருந்துள்ளார். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி கட்சியில் பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் அதைத் தீர்த்து வைக்க பிரதானுக்கு பொறுப்புகளை வழங்கியுள்ளார்.

ரமேஷ் பொக்ரியால் மத்திய கல்வி அமைச்சராக இருந்தபோது, 2020 தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த அரசாங்கம் போராடியபோது, மோடி அவரைப் பொறுப்பில் இருந்து நீக்கி கடந்த ஆண்டு அத்துறையை பிரதானிடம் ஒப்படைத்தார்.

பூபேந்திர யாதவைப் பொறுத்தவரை, அவர் சமீபத்தில் கட்சியின் மத்திய தேர்தல் குழுவில் சேர்க்கப்பட்டவர்.

ஆனால், ’நட்டாவை மாற்றும் போட்டியில் என்ன நடந்தாலும் தர்மேந்திர பிரதானே முன்னணி வகிப்பார்’ என பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT