முகப்பு
இந்தியா

தாஜ்மஹாலை 'தேஜோ மஹாலயா’ எனப் பெயர் மாற்ற பாஜக கவுன்சிலர் முயற்சி

தாஜ்மஹாலை ’தேஜோ மஹாலயா’ எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என பாஜக கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:12 AM
தாஜ்மஹால்
பகிர்:

தாஜ்மஹாலை ’தேஜோ மஹாலயா’ எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என பாஜக கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.

பாஜக கவுன்சிலரான ஷோபாராம் ரத்தோர் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ’தேஜோ மஹாலயா’ எனப் பெயர் மாற்ற செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை ஆக்ரா மாநகராட்சி கூட்டத்தில் முன்வைத்துள்ளார்.

மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று இதுகுறித்தான முன்மொழிவை ஷோபாராம்  கொண்டுவந்ததுடன் தாஜ்மஹாலில் தாமரை கலசம் இருப்பதற்குத் தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த பெயர் மாற்ற பரிசீலனை குறித்து ஆக்ரா மாநகராட்சி கூட்டத்தில்  விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக,  தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த பெயர்மாற்றக் கோரிக்கை விவகாரம் துவங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →