முகப்பு
இந்தியா

பயங்கரவாதிகள் கைது: அசாமில் மதரஸா இடிப்பு

வங்கதேசத்தில் செயல்படும் அன்சாருல் இஸ்லாம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அசாமில் கைதானதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திவந்த மதரஸா பள்ளி இன்று அரசால் இடிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:12 AM
இடிக்கப்பட்ட மதரஸா
பகிர்:

வங்கதேசத்தில் செயல்படும் அன்சாருல் இஸ்லாம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அசாமில் கைதானதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திவந்த மதரஸா இன்று அரசால் இடிக்கப்பட்டது.

அசாமில் ஆகஸ்ட் மாதத்தில் அன்சாருல் இஸ்லாம் இயக்க பயங்கரவாதிகள் 37 பேர் கைதாகியுள்ளனர். அதில் முக்கியமானவரான முஸ்தபா என்பவர், மோரிகான் மாவட்டத்தின் சோஹோரியா கிராமத்தில் மதரஸா நடத்தி வந்துள்ளாா். இவா், அன்சாருல் இஸ்லாம் இயக்கத்தின் நிதி பரிவா்த்தனைகள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளில் தொடா்புடையவா் என்று தெரியவந்துள்ளது.

இதனால், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோரிகான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அபா்ணா நடராஜன் தெரிவித்திருந்தார்.

மேலும், பயங்கரவாதிகள் கைது குறித்து மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வா சா்மா கூறுகையில், ‘அஸ்ஸாமில் அன்சாருல் இஸ்லாம் இயக்க பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, அவா்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் பயனாக, 2 பயங்கரவாத குழுக்கள் கண்டறியப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்றாா்.

இந்நிலையில், இன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டு வந்த மர்கசுல் மா-ஆரிஃப் குவாரியானா மதரஸா  இன்று அம்மாநில அரசால் இடிக்கப்பட்டது.

இது அசாமில்  3-வது மதரஸா இடிப்பு ஆகும்.

முழு கட்டுரையைப் படிக்க →