இந்தியா

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் புகார்

DIN

எரிபொருள் விலையேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் நட்டமடைந்து வருவதாக பிரபல விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பாண்டு இரண்டாவது காலாண்டில் ரூ.789 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவே கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ.729 கோடி நட்டம் ஏற்பட்டிருந்தது. கரோனா தொற்று பரவலால் ஏற்கெனவே நட்டத்தை சந்தித்து வந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான எரிபொருளுக்கான விலையேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் விமானப் பணியாளர்களுக்கான சம்பளத் தொகை இரண்டாவது மாதமாக தாமதமாகி உள்ளதாக பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தங்களுக்கான சம்பளத் தொகை நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ள பணியாளர்கள் விமான நிறுவனம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT