இந்தியா

குஜராத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் ‘மினி ஆப்பிரிக்கா’ கிராம மக்கள்

குஜராத் மாநிலத்தில் மினி ஆப்பிரிக்கா என்று அழைக்கப்படும் ஜாம்பூர் கிராம மக்கள் முதல்முறையாக வாக்களித்து வருகின்றனர்.

DIN


குஜராத் மாநிலத்தில் மினி ஆப்பிரிக்கா என்று அழைக்கப்படும் ஜாம்பூர் கிராம மக்கள் முதல்முறையாக வாக்களித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு படகு ஓட்டிகளாகவும், வணிகர்களாகவும் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்த பழங்குடியினர் ஜூனாகத் மாவட்டம் ஜாம்பூர் கிராமத்தில் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்முறையாக இவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு வாக்காளிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஜாம்பூர் கிராமத்திலேயே பிரத்யேகமான பழங்குடியினர் சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவும் நடைபெற்று வருகின்றது.

முதல்முறையாக தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஜாம்பூர் கிராம மக்கள் பலவகை உணவுகளை சமைத்தும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு  19 மாவட்டங்களில் 89 தொகுதிகளில் நடைபெற்று வருகின்றது.

முதல் கட்ட தோ்தலில், 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களது தலைவிதியை 2.39 கோடி வாக்காளா்கள் தீா்மானிக்கவுள்ளனா். இதில், ஆண்கள் 1.24 கோடி போ், பெண்கள் 1.15 கோடி போ், மூன்றாம் பாலினத்தவா் 497 போ் ஆவா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT