இந்தியா

குஜராத்தில் பேரணியைத் தொடங்கினார் பிரதமர் மோடி

DIN


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரப் பேரணி இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.

முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை குறிவைத்து பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கத்தில் இந்தப் பேரணி தொடங்கியுள்ளது.

குஜராத்தில் முதல் கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாலை 3 மணி நிலவரப்படி 48.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலை குறிவைத்து பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று 50 கிலோமீட்டர் பேரணியைத் தொடங்கியுள்ளார்.

மாலை 5 மணியளவில் தொடங்கிய பேரணி, 6.30 மணியளவில் காந்தி நகர் தெற்கு தொகுதியில் நிறைவு பெறுகிறது. சுமார் 35 இடங்களில் வாகனத்தை நிறுத்தி வாக்கு சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT