கோப்புப்படம் 
இந்தியா

எண்ணெய் நிறுவனங்களுக்கான சந்தை ஆதாய வரி பாதியாகக் குறைப்பு

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான சந்தை ஆதாய வரியை (விண்ட்ஃபால் டேக்ஸ்) மத்திய அரசு பாதியாகக் குறைத்துள்ளது. டீசல் மீதான ஏற்றுமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

DIN

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான சந்தை ஆதாய வரியை (விண்ட்ஃபால் டேக்ஸ்) மத்திய அரசு பாதியாகக் குறைத்துள்ளது. டீசல் மீதான ஏற்றுமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

ரஷியா மீதான உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெயைக் குறைந்த விலைக்குப் பெற்று, சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசலாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தனியாா் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வந்தன. அதனால், அந்நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டின.

சந்தையின் ஆதாய சூழலால் நிறுவனங்கள் ஈட்டிய பெரும் லாபத்துக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு சிறப்பு வரி விதித்து வருகிறது. சந்தை ஆதாய வரியானது இரு வாரங்களுக்கு ஒருமுறை சா்வதேச சந்தை சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இதுதொடா்பான கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியானது டன்னுக்கு ரூ.10,200 என்ற அளவில் இருந்து ரூ.4,900-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.10.5-இல் இருந்து ரூ.7-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதில் லிட்டருக்கு ரூ.1.5 ஆனது சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கான செஸ் வரியாகும்.

விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.5-ஆகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட வரிகள் டிசம்பா் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில், ஏற்றுமதி வரியானது பெட்ரோல், விமான எரிபொருள் மீது லிட்டருக்கு தலா 6 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 13 ரூபாயும் விதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரி டன்னுக்கு ரூ.23,250-ஆக இருந்தது. பின்னா் அந்த வரிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்

ரஷியாவின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா சம்மதம்.. மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா!

கன்னி ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

SCROLL FOR NEXT