தில்லி மாநகராட்சி தேர்தலில் வாக்களித்தப் பெண் 
இந்தியா

தில்லி மாநகராட்சி தேர்தல்: 4 மணி வரை 45% வாக்குப்பதிவு

250 வார்டுகளின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தில்லி மாநகராட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

DIN

தில்லி மாநகராட்சி தேர்தல் மாலை 4 மணி நிலவரப்படி 45 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

250 வார்டுகளின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தில்லி மாநகராட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு வாக்களிக்கவும் 13,638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தில்லி மாநகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 7ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்தத் தேர்தலில் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

தில்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT