முகப்பு
இந்தியா

டாக்காவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆகப் பதிவு!

டாக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வங்காளதேச ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:01 AM
கோப்புப்படம்
பகிர்:

டாக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வங்காளதேச ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இன்று வெளியிட்ட தகவலில், 

இன்று காலை 9.02 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவானது. 

வங்காள விரிகுடாவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வாளர் காசி ஜெபுன்னேசா தெரிவித்தார். 

டாக்காவில் உள்ள அகர்கான் நிலஅதிர்வு மையத்திலிருந்து 520 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக  வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நிலஅதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள பங்களாதேஷில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →