இந்தியா

குண்டூரில் என்ஆர்ஐ பயிற்சி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை!

DIN

பணமோசடி வழக்கு மற்றும் கரோனா நோயாளிகளுக்கு அதிகத்தொகை வசூலித்தது உள்ளிட்ட பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆந்திரத்தின் குண்டூரில் உள்ள என்ஆர்ஐ அகாடமி சயின்ஸில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. 

விஜயவாடா, காக்கிநாடா, குண்டூர் மற்றும் ஹைதராபாத்தில் பல்வேறு இடங்களில் ஹைதராபாத் பிரிவின் அமலாக்கத்துறை குழுக்கள் நடத்திய சோதனையில் இந்த வழக்கில் தொடர்புடைய பல்வேறு நபர்களின் பணம், குற்ற ஆவணங்கள், சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பணமோசடி தடுப்புச் சட்டம் 2002இன் கீழ் என்ஆர்ஐ அகாடமி ஆப் சயின்ஸின் உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சிலருக்கு எதிராக நடந்துவரும் விசாரணையில் ஒரு பகுதியாகும். அமலாக்கத்துறையின் ஹைதராபாத் பிரிவு அதிகாரப்பூர்வ அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது. 

கட்டடம் கட்டுதல், பெரும் தொகை மோசடி, சங்கத்தின் நிதியை திசை திருப்பியது தொடர்பாக உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஆந்திர காவல்துறை பதிவு செய்த எஃப்ஐஆர்களின் அடிப்படையின் அமலாக்கத்துறை விசாரணைத் தொடங்கியது. 

மேலும், இதுதொடர்பாக அசையா சொத்துகளின் ஆவணங்கள், மின்னணு உபகரணங்களும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஸ்ரீவித்ய பாரதி பள்ளி மாணவா் சிறப்பிடம்

சுற்றுச்சூழல் பயிற்சி பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ்

வெள்ளூற்று ஸ்ரீ பால ஆஞ்சனேயா் சுவாமிக்கு சிறப்பு பூஜை

முத்துப்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லை

களஞ்சியம் 2.0 மென்பொருளில் ஓய்வூதியா்கள் பான் அட்டையை அப்டேட் செய்வது கட்டாயம்

SCROLL FOR NEXT