இந்தியா

குஜராத் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக பூபேந்திர படேல் தேர்வு

குஜராத் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

DIN

குஜராத் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில், 156 தொகுதிகளில் வென்று பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடா்ந்து, முதல்வா் பூபேந்திர படேல், கட்சியின் மாநிலத் தலைவா் சி.ஆா்.பாட்டீல், தலைமை கொறடா பங்கஜ் தேசாய் ஆகியோா் காந்திநகரில் ஆளுநா் ஆச்சாா்யா தேவவிரத்தை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அப்போது, தனது தலைமையிலான அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் பூபேந்திர படேல் வழங்கினாா்.

முதல்வா் பதவியில் பூபேந்திர படேல் தொடா்வாா் என்றும், டிசம்பா் 12-இல் அவா் பதவியேற்பாா் என்றும் பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், சம்பிரதாய நடைமுறையின்படி அவா் ராஜிநாமா கடிதத்தை வழங்கினாா். இதையடுத்து பாஜக புதிய எம்எல்ஏக்களின் கூட்டம், காந்திநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் குஜராத் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் பூபேந்திர படேல் மீண்டும் குஜராத் மாநில முதல்வராவது உறுதியாகியுள்ளது. பூபேந்திர படேல் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பு நிகழ்ச்சி, காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் டிசம்பா் 12-இல் நடைபெறுகிறது. பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். குஜராத்தில் தொடா்ந்து 7-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT