இந்தியா

ரயில்வே துறையில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்: மத்திய ரயில்வே அமைச்சர்

ரயில்வே துறையில் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

DIN

ரயில்வே துறையில் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனை தெரிவித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: குரூப் ஏ பிரிவில் 2,201 காலிப் பணியிடங்களும், குரூப் பி பிரிவில் 858 காலிப் பணியிடங்களும், குரூப் சி பிரிவில் 3,12,944 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமலும் உள்ளது. குரூப் சி பிரிவில் வடக்கு ரயில்வேயில் 38, 754 பணியிடங்களும், மேற்கு ரயில்வேயில் 30,476 பணியிடங்களும் நிரப்பப்படாமல் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அதேபோல கிழக்கு ரயில்வேயில் 30,141 பணியிடங்களும், மத்திய ரயில்வேயில் 28,653 பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT