முகப்பு
இந்தியா

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி!

பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:


பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். 

மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று இஷாவ்பூரில் உள்ள காவல் துறையினர் தெரிவித்தனர். 

உயிரிழந்த மூவரின் உடல்கள் பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

இறந்தவர்களில் அமித் ரஞ்சன் சாப்ரா சதார் மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்தார். மாவட்ட காவல் துறையினர் மருத்துவமனைக்கு வந்து ரஞ்சனின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

கிராமத்தில் போலி மது அருந்தி இறந்ததாகக் கூறப்படும் மற்ற நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் டோய்லா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங், மஷ்ரக் பகுதியைச் சேர்ந்த குணால் குமார் மற்றும் இஷாவ்பூர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த கணேஷ் ராம் ஆகியோர் அடங்குவர்.

இறந்தவரின் உறவினர்கள் மரணத்திற்கு காரணம் கள்ளச் சாராயம் என்று கூறியுள்ளனர், ஆனால் போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →