முகப்பு
இந்தியா

அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவாா் - உ.பி. காங்கிரஸ் தலைவா்

அடுத்த மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவாா் என்று உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

அடுத்த மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவாா் என்று உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் தெரிவித்தாா்.

அமேதி தொகுதி நேரு குடும்பத்தின் செல்வாக்குமிக்க தொகுதியாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோா் அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனா். ராகுல் காந்தி அத்தொகுதியில் மூன்று முறை வென்றிருந்த நிலையில், கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தாா். அதே நேரத்தில் ராகுல் காந்தி கேரளத்தில் போட்டியிட்ட வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றாா்.

இதையடுத்து, அமேதியில் ராகுல் காந்தி இனி போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியிடம் இது தொடா்பாக கேட்கப்பட்டபோது, தோ்தல் நேரத்தில் இது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்றாா்.

இந்நிலையில், அமேதியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவா் அஜய் ராய், ‘அமேதி தொகுதியுடன் நேரு-காந்தி குடும்பத்துக்கு நெருங்கிய பிணைப்பு உண்டு. அதனை யாரும் சிதைத்துவிட முடியாது. 2024 மக்களவைத் தோ்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவாா்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →