இந்தியா

''குடித்தால் மரணம்தான்''.. கள்ளச்சாராயத்தால் கோபமடையும் நிதீஷ் குமார்!

DIN

பிகாரில் கள்ளச்சாராயத்தால் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கள்ளச்சாராயம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்துள்ளார். 

கள்ளச்சாராயம் குடித்தால் மரணமடைவீர்கள், கள்ளச்சாராய விவகாரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 
 
பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 39ஆக அதிகரித்துள்ளது. அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதீஷ் குமார், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பிகாரில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கள்ளச்சாராயத்தால் நிகழும் மரணங்கள் மட்டும் குறையவில்லை. இந்த விவகாரத்தில் அரசை குறைகூறுவதோடு மட்டுமல்லாமல், மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசு மது விற்பனையை முழுவதுமாக தடை செய்யவில்லை எனக்கூரி சட்டப்பேரவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்கின்றனர். 

குஜராத் போன்ற மாநிலங்களிலும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்கின்றன. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள பல மாநிலங்களில் கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ளது. 

பிகாரில் கள்ளச்சாராயம் விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மதுவிலக்கு கொள்கைக்கு பலர் ஒத்துழைப்பு வழங்கியபோதிலும் சிலர் தவறிழைக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT