இந்தியா

''ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி''..! ஸ்விக்கி ஆர்டரில் முதலிடம் வகிக்கும் உணவு

DIN

ஸ்விக்கி நிறுவனத்தில் கடந்த ஆண்டைப் போல, நடப்பாண்டிலும் வாடிக்கையாளர்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. 

ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் பிரியாணி கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் உணவுப் பிரியர்களாக உள்ளனர். மாநிலங்களுக்கேற்ப உணவு வகைகளும் மாறினாலும், அனைத்துத் தரப்பு மக்களாலும் விரும்பக் கூடிய உணவாக பிரியாணி உள்ளது எனலாம். 

அந்தவகையில் பிரியாணியில், வகைகளும், அதற்கேற்ப சுவைகளும் பல வகைகளில் உள்ளன. இதுவே பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை பிரியாணி பிரியர்களாக இருக்க வைக்கிறது எனலாம். 

இணையவழியில் உணவு விநியோகம் செய்து வரும் ஸ்விக்கி நிறுவனம் ஆண்டுதோறும் மக்களால் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளைப் பட்டியலிட்டு வருகிறது.

அந்தப் பட்டியலில் இந்த ஆண்டும் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, சைவமோ, அசைவமோ பிரியாணி ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் மசாலா தோசை அதிக வாடிக்கையாளர்களால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நாண், வெஜ் பிரியாணி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

அதேபோன்று சர்வதேச உணவுகளும் அதிக அளவில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதாவது, சூஷி, மெக்ஸிகன் பெளல்ஸ், பாஸ்தா ஆகியவை அதிக அளவு ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. 

நொறுக்குத் தீனி பிரிவில் சமோசா முதலிடமும், பாப்கார்ன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக பாவ் பாஜி, பிரெஞ்ச் ஃபிரை, கார்லிக் பிரெட்ஸ்டிக்ஸ் ஆகியவை அதிக அளவு ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT