முகப்பு
இந்தியா

கல்லூரி விடுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மாணவர்: நடந்தது என்ன?

கர்நாடகத்தின் பன்னர்கட்டா அருகே உள்ள கல்லூரியில் பொறியியல் மாணவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 16 டிசம்பர், 2022 at 1:45 PM
பகிர்:

கர்நாடகத்தின் பன்னர்கட்டா அருகே உள்ள கல்லூரியில் பொறியியல் மாணவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த மாணவன் கேரளத்தின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது நிதின் நாராயணா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனேகலில் உள்ள ஏஎம்சி பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். 

டிசம்பர் 1ஆம் தேதி நிதின் முதலாமாண்டு கணினி அறிவியல் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். இவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுகுறித்து பன்னர்கட்டா போலீசார் கூறுகையில், 

கேரளத்தின் கோசிக்கோடு மாவட்டத்தில் உள்ள பானி ஜாரியா கிராமத்தைச் சேர்ந்த நிதினின் குடும்பம், கொய்லாண்டி கிராமத்தில் வசிப்பவர்கள். மாணவரின் பெற்றோர் தற்போது துபாயில் வசித்துவருவதாக தகவல் தெரிந்துள்ளது. 

கடும் மனஅழுத்தம் காரணமாக நிதின் இந்த தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

முன்னதாக ராஜஸ்தானின் கோட்டாவில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.