“எங்களுக்கு அதிகாரமே இல்லை”: புதுவை முதல்வர் அதிருப்தி
எங்களுக்கு அதிகாரமே இல்லை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்து கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுக்கு அதிகாரமே இல்லை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்து கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி போராடும் போராட்டக்குழுவினர் வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.
இதையும் படிக்க | படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
Advertisement
Advertisement
அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்த பிறகு நமக்கு மரியாதையே இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. அரசு ஊழியர்கள் சம்பந்தமாக நிறைவேற்ற விரும்புகிற திட்டங்களைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. திட்டத்தை செய்யக் கூடாது என்பதற்காக உடனடியாக அறிவிப்பாணைகள் வெளியிடப்படுகின்றன. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துதான் தீர்வு” எனத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் சமீப காலங்களில் புதுவை முதல்வர் தெரிவிக்கும் கருத்துகள் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.