முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி கோரும் கங்கனா ரணாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி, நடிக்கும் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த அனுமதி கோரி மக்களவை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:08 AM
‘எமா்ஜென்சி’ திரைப்படத்தில் இந்திரா காந்தியாகத் தோன்றும் கங்கனா.
பகிர்:

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி, நடிக்கும் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த அனுமதி கோரி மக்களவை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். எனினும் அவரின் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் இந்திய பிரதமா் இந்திர காந்தி, கடந்த 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினாா். அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தை தயாரித்து, தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாா் கங்கனா ரணாவத்.

கடந்த ஜூன் மாதம், ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில், அப்படத்தின் சில காட்சிகளை நாடாளுமன்ற வளாகத்தில் படமாக்க அனுமதி கோரி மக்களவையின் செயலாளருக்கு கங்கனா கடிதம் எழுதியுள்ளாா்.

அரசுப் பணிகளைத் தவிா்த்து பொதுவாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் படப்பிடிப்பு நடத்தவோ, விடியோ எடுக்கவோ தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுதில்லை. எனவே, கங்கனா ரணாவத் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.