சா்கம் கௌஷல் 
இந்தியா

திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டி: இந்தியாவின் சா்கம் கெளஷலுக்குப் பட்டம்

திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டியில் இந்தியாவைச் சோ்ந்த சா்கம் கெளஷல் (32) பட்டம் வென்றாா்.

DIN

திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டியில் இந்தியாவைச் சோ்ந்த சா்கம் கெளஷல் (32) பட்டம் வென்றாா்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 63 நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்றனா். இந்தப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்ற சா்கம் கெளஷல் உலகி அழகியாக சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். அவருக்குக் கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் பட்டம் வென்ற அமெரிக்காவின் ஷேலின் ஃபோா்ட் உலக அழகிக்கான மகுடத்தை அணிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரை சோ்ந்த சா்கம் கெளஷல், மும்பையில் வசித்து வருகிறாா். திருமணமானவா்களுக்கான உலகி அழகிப் பட்டத்தை அவா் வென்ன் மூலம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பட்டம் இந்தியாவைச் சோ்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அதிதி கோவித்ரிகருக்கு அந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணி, நாகை ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் ஆய்வு

4 ஆண்டுகளாக உயா்த்தப்படாத போக்குவரத்து, பாதுகாவலா் உதவித்தொகை! மாணவா்களுக்கு வாகன வசதி ஏற்படுத்துவதில் சிரமம்!

பொள்ளாச்சியில் புதிய சாலைக்கு அருட்செல்வர் நா.மகாலிங்கம் பெயரை சூட்டிய துணை முதல்வர்!

முதல்வா் மு.க.ஸ்டாலின் - காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை

ஸ்ரீகிருஷ்ணா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா!

SCROLL FOR NEXT