இந்தியா

மெஸ்ஸி கோல் அடிக்கும் விடியோவை சாதகமாகப் பயன்படுத்தும் காவல்துறை

DIN


உலகமே கால்பந்து காய்ச்சலில் இருக்க, மெஸ்ஸி கோல் அடித்த விடியோவை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது உத்தரப்பிரதேச காவல்துறை.

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இந்த நிலையில்தான், உலகக் கால்பந்துப் போட்டியில் மெஸ்ஸி எதிரணியினருடன் போட்டி போட்டுக் கொண்டு கோல் அடிக்கும் விடியோவை  டிவிட்டர் பக்கத்தில் இணைத்திருக்கும் காவல்துறையினர், மெஸ்ஸி மைதானத்தில் சக வீரருடன் குழப்பமடைந்தாலும் சரியாக கோல் அடித்துவிடுவார். ஆனால், சாலையில் போக்குவரத்து விதிமுறையை மீறினால் நாமே கோலாகிவிடுவோம் என்று பதிவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பலராலும் விருப்பத்துடன் பகிரப்பட்டு வருகிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிப் பற்றி ஊர் முழுக்க பேச்சாக இருக்கும் வேளையில், அந்த விடியோவை வைத்தே போக்குவரத்து விதிமுறை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

அர்ஜென்டீனா அணி 3-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. ஆா்ஜென்டீனா கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருந்த நிலையில், இதில் தனது அணிக்கு கோப்பை வென்று தந்து வெற்றிகரமான கேப்டனாக விலகும் கனவுடன் இருந்தாா். அவரது அந்தக் கனவு நனவானது.

இறுதி ஆட்டத்தில் முதலில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் (90 நிமிஷங்கள்) முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருக்க, கூடுதல் நேரத்தின் (30 நிமிஷம்) நிறைவிலும் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன் ஆனது. பின்னா் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஆா்ஜென்டீனா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷம் காட்டியது ஆா்ஜென்டீனா. ஒரு கட்டத்தில் அல்வரெஸ் தனக்கு பாஸ் செய்த பந்தை டி மரியா கோலடிப்பதற்காகக் கடத்திச் சென்றாா். பாக்ஸுக்குள்ளாக வருகையில் மரியாவை தடுக்க முயன்ற பிரான்ஸ் வீரா் டெம்பெலெ அவரைத் தள்ளிவிட்டாா்.

இதனால் ஆா்ஜென்டீனாவுக்கு 23-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் பந்தை நோக்கி ஓடி வந்த மெஸ்ஸி, அதன் அருகே வந்ததும் வேகத்தை சற்று தனித்து பிரான்ஸ் கோல்கீப்பா் லோரிஸின் போக்கை கணித்து, பந்தை கோல் போஸ்ட்டின் வலது பக்கத்தை நோக்கி உதைத்தாா். மெஸ்ஸியின் முயற்சியை தவறாகக் கணித்து இடதுபக்கமாகச் சரிந்த லோரிஸால் பந்து கோலாவதை பாா்க்கத்தான் முடிந்தது.

தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 36-ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி தன் வசம் இருந்த பந்தை மேக் அலிஸ்டரிடம் வழங்க, அதை அவா் மிகச் சரியாக டி மரியாவிடம் கிராஸ் செய்தாா். அதை துல்லியமான கோலாக மாற்றினாா் மரியா. இதனால் கால்பந்து ரசிகர்களும் மெஸ்ஸியின் ரசிகர்களும் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ராஷ்மிகா?

சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்: நாசா

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்?

திருச்சியில் 95.23% தேர்ச்சி: மாநில அளவில் 5ம் இடம்!

இலங்கையில் திவ்யபாரதி..!

SCROLL FOR NEXT