இந்தியா

தன்பாலின ஈர்ப்புத் திருமணங்கள் அழிவுக்கு வழிவகுக்கும்: பாஜக

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் தன்பாலினத்தோரின் திருமணத்தை இரண்டு நீதிபதிகள் மட்டும் தீர்மானிக்கக்கூடாது

DIN

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் தன்பாலினத்தோரின் திருமணத்தை இரண்டு நீதிபதிகள் மட்டும் தீர்மானிக்கக்கூடாது என்றும் பாஜக எம்.பி. சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். 

பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பாஜக எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தன்பாலின ஈர்ப்பு திருமணத்திற்கு அனுமதி தர வேண்டும் என தன் பாலின ஈர்ப்பு ஜோடிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். தன்பாலின ஈர்ப்பு உறவு மற்றும் திருமணங்கள் குறித்து சர்ச்சையான மாறுபட்ட கருத்துக்கள் சமூகத்தில் நிலவி வருகின்றன. 

இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி. சுஷில் மோடி, நாட்டின் தனிப்பட்ட வாழ்க்கை முறையின் அழிவுக்கு வழிவகுக்கும். சமூகப் பிரச்னையில் இரு நீதிபதிகள் மட்டுமே முடிவு எடுக்க முடியாது. நாடாளுமன்றமும் சமூகமும் முக்கிய விவாதங்களை எழுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வெளியிட்ட விடியோ! |மனசு முழுக்க வலி! |Vijay video

அக். 3 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுமா?

கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை: முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

“கரூர் பலி: திட்டமிடப்பட்டதா?” அமைச்சர் Anbil Mahesh பதில்! | Karur | TVK | VIJAY | DMK

SCROLL FOR NEXT