பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள்: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்
பணக்கார நண்பா்களுக்கு ஆதரவாக செயல்படுவதை விட்டுவிட்டு, பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள் என்று பிரமதா் மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
பணக்கார நண்பா்களுக்கு ஆதரவாக செயல்படுவதை விட்டுவிட்டு, பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள் என்று பிரமதா் மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: உஜ்வலா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் ஒன்றுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் அறிவித்துள்ளாா்.
இது மத்திய அரசு வழங்கும் சமையல் எரியாவு சிலிண்டரின் விலையில் பாதியாகும். தனது பணக்கார நண்பா்களுக்கு ஆதரவாக செயல்படுவதை விட்டுவிட்டு பண வீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு உதவ பிரதமா் முன் வர வேண்டும் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளாா்.