முகப்பு
இந்தியா

காஷ்மீரில் கடும் குளிர்: மக்கள் அவதி!

லடாக் மற்றும் காஷ்மீரில் உறைபனிக்குக் கீழே இரவு வெப்பநிலையும், வறண்ட குளிர் காலநிலையும் அடுத்த 24 மணி நேரத்தில் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
பகிர்:

லடாக் மற்றும் காஷ்மீரில் உறைபனிக்குக் கீழே இரவு வெப்பநிலையும், வறண்ட குளிர் காலநிலையும் அடுத்த 24 மணி நேரத்தில் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாள்களுக்கு முன் பனிக்காலம் துவங்கிய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பூஜ்ஜியத்திற்குக் குறைவான இரவு வெப்பநிலையுடன் வறண்ட குளிர் காலநிலை தொடரும் என்று வானிலை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

டிச.21 மற்றும் டிச.22-ல் சில்லைக் காலன் எனப்படும் கடுமையான குளிர்காலத்தின் 40 நாள்கள் தொடங்குகிறது. இந்த குளிர்காலம் ஜனவரி 30, 2023 அன்று நிறைவடைகின்றது. இந்தக் காலகட்டத்தில் ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் உறைந்துபோகும் அளவுக்குக் கடுமையான குளிர் நிலவும். 

குளிர்காலத்தில் இருள் மட்டுமே காஷ்மீரில் நிலவும் என்பதால் முன்கூட்டியே உணவு உள்ளிட்ட அன்றாடத் தேவைக்கானப் பொருள்களை காஷ்மீர் மக்கள் வாங்கி இருப்பு வைத்து வருகின்றனர். 

காஷ்மீரின் பல பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலைப் பதிவாகி வருவதால் ஸ்ரீநகரில் மைனஸ் 3.4, ஆகவும், பஹல்காமில் மைனஸ் 5.4 ஆகவும்  குல்மார்க்கில் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் ஆகவும் குளிர் பதிவாகியுள்ளது.லடாக் பகுதியில், கார்கில் மற்றும் லே நகரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக மைனஸ் 11.8 இருந்தது. ஜம்முவில் 6.7, கத்ரா 7.5, பாடோட் 2.1, பனிஹால் மைனஸ் 1.2 மற்றும் பதேர்வாவில் 0.3 குறைந்தபட்ச வெப்பநிலையாக இருந்தது.

இதனால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து சிக்கல்களும் அதிகரித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.