இந்தியா

சீனத்தை அச்சுறுத்தும் ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் பரவல்

DIN

புது தில்லி: சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு புதிதாக அதிகரித்துவரக் காரணமான ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா உள்பட பல நாடுகளில் தற்போது அதிகரித்து வரும் ஒமைக்ரான் வகை பிஎஃப்.7 வகையிலான திரிபு வைரஸ் இந்தியாவிலும் பரவியிருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் கரோனா வைரஸ் கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தி நடத்தியிருந்தது.

இந்த நிலையில், கரோனா அதிகம் பரவி வரும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யும் நடைமுறை மீண்டும் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், பிஎஃப.7 வகையான ஒமைக்ரான் திரிபு குஜராத்தில் 2 பேருக்கும் ஒரிசாவில் ஒருவருக்கும் பாதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT