முகப்பு
இந்தியா

தாணே தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவர் பலி, 2 பேர் காயம்! 

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் உள்ள தொழிற்துறை பிரிவில் காற்றழுத்தக் கட்டுப்பாட்டு வால்வு சோதனையின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 28 வயது தொழிலாளி உயிரிழந்தார். 

Updated On : 21 டிசம்பர், 2022 at 12:17 PM
தாணே தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவர் பலி, 2 பேர் காயம்! 
பகிர்:

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் உள்ள தொழிற்துறை பிரிவில் காற்றழுத்தக் கட்டுப்பாட்டு வால்வு சோதனையின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 28 வயது தொழிலாளி உயிரிழந்தார். 

அம்பர்நாத் டவுன்ஷிப்பில் அமைந்துள்ள தொழிற்சாலை வால்வுகள் தயாரிக்கப்படும் பிரிவில் செவ்வாய் இரவு இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வெடிவிபத்தில் உயிரிழந்தவர் ஸ்ரீகாந்த் கதம் என அடையாளம் காணப்பட்டார். காற்றழுத்தக் கட்டுப்பாட்டு வால்வில் காற்றை நிரப்பி சோதனை செய்தபோது வெடித்து சிதறியது என சிவாஜி நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Advertisement

இந்த வெடிவிபத்தில் மேலும் 2 தொழிலாளர்கள் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. 
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.