இந்தியா

சிக்கிம்: ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 வீரர்கள் பலி

சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 

DIN

சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 

சிக்கிம் மாநிலம், சாட்டன் என்ற பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் 3 வாகனங்களில் தாங்கு பகுதியை நோக்கி இன்று காலை புறப்பட்டனர். செமா என்கிற பகுதியில் ஒரு வளைவில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது அதில் ஒரு வாகனம் மட்டும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இருப்பினும் இந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலியானதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிக்கிமில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலியானதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

திராவிட மாடல் பெயர்க்காரணம் எதற்காக? -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

SCROLL FOR NEXT