ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இணைந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று நாட்டின் தலைநகர் தில்லியை அடைந்துள்ளது. கேரளம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து சென்ற இந்த நடைபயணத்தில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்கினர்.
இதையும் படிக்க | தள்ளிப்போகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வெளியீடு
இந்நிலையில் இந்த ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சனிக்கிழமை தில்லியில் ராகுல்காந்தியுடன் இணைந்து கொண்டார்.
இதற்கான சனிக்கிழமை காலை தில்லியை அடைந்த கமல்ஹாசன் நாட்டின் பன்மைத்துவத்தை பாதுகாக்க ராகுல்காந்தி முன்னெடுக்கும் இந்த நடைபயணத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நடைபயணத்தில் ராகுல்காந்தி, கமல்ஹாசன் உடன் விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்ப உறுப்பினா்கள், காங்கிரஸ் முக்கியத் தலைவா்கள் உள்பட 40,000 முதல் 50,000 போ் வரை பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.