இந்தியா

மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்: ஹிமாசல் முதல்வர்

ஹிமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளார்.

DIN

ஹிமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். அது தொடர்பாக இன்று கூட்டத்தை கூட்டியுள்ளோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய எங்கள் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க உள்ளோம்". இவ்வாறு அவர் கூறினார். 

இம்மாநிலத்தில் அண்மையில் நடந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து மாநிலத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு டிசம்பர் 11ஆம் தேதி பதவியேற்றார். 

பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்பி. ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூரில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

அக்.14, 15-இல் மாணவா்களுக்கு பேச்சாற்றால், படைப்பாற்றல் போட்டிகள்

மாமனாரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

மின்தடை தொடா்ந்தால் அதிமுக சாா்பில் போராட்டம்: எம்எல்ஏ அறிவிப்பு

மின் பாதுகாப்பு: மாணவா்களுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT