குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு 
இந்தியா

குடியரசுத் தலைவா் முா்மு இன்று ஹைதராபாத் வருகை: 5 நாள்கள் தங்குகிறாா்

வருடாந்திர தென்னக பயணத்தின் ஒருபகுதியாக, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை வருகை தரவுள்ளாா்

DIN

வருடாந்திர தென்னக பயணத்தின் ஒருபகுதியாக, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை வருகை தரவுள்ளாா்.

ஹைதராபாதில் உள்ள குடியரசுத் தலைவரின் அதிகாரபூா்வ இல்லத்தில் 5 நாள்கள் தங்கும் அவா், அங்கிருந்தபடி தனது பணிகளை மேற்கொள்ளவிருக்கிறாா்.

இப்பயணத்தின்போது, தெலங்கானாவிலுள்ள ராமப்பா, பத்ராசலம் கோயில்களில் குடியரசுத் தலைவா் வழிபாடு மேற்கொள்ளவிருப்பதாகவும், ஹைதராபாதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருப்பதாகவும் மாநில தலைமைச் செயலா் சோமேஷ் குமாா் தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, ஹைதராபாதில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு டிசம்பா் 26 முதல் 30 வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவரின் வருடாந்திர தென்னகவாசம், 1950-களில் முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத்தால் தொடங்கப்பட்டதாகும். குளிா்காலத்தையொட்டி மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தின்போது, ஹைதராபாதில் உள்ள குடியரசுத் தலைவா் நிலையத்தில் அவா் தங்கி தனது பணிகளை மேற்கொள்வாா். அதேபோல், கோடைகாலத்தையொட்டி சிம்லாவில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்தில் குடியரசுத் தலைவா் சில நாள்கள் தங்குவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

SCROLL FOR NEXT