இந்தியா

பஞ்சாபில் சுட்டுவீழ்த்தப்பட்டது பாகிஸ்தான் ஆளில்லா விமானம்!

DIN

புது தில்லி: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பறந்த ஆளில்லா விமானம் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அமிர்தசரஸ் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் ஆளில்லா விமானம் வருவதும் அதனை எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7:40 மணியளவில் பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள ராஜதல் கிராமத்தின் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பறந்த ஆளில்லா வான்வழி வாகனம் பறந்தது. உடனடியாக எல்லை பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டது. 

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனம் குவாட்காப்டர் எல்லை வேலிக்கு அருகில் உள்ள வயலில் இருந்து மீட்கப்பட்டது, மேலும், அது அந்த பகுதியில் ஏதேனும் வெடிபொருள்கள் கீழே விழுந்ததா என தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று எல்லைப் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறினார். 

கடந்த வாரம் பஞ்சாபில் இதுபோன்ற குறைந்தது மூன்று பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் எல்லைப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT