இந்தியா

கர்நாடகத்தில் டிச.29 வரை மது விற்பனைக்குத் தடை!

கர்நாடகத்தின் சில பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு டிசம்பர் 29 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

DIN

கர்நாடகத்தின் சில பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு டிசம்பர் 29 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் என்.சஷிகுமார் கூறுகையில்,

கடந்த 24ஆம் தேதி கடிப்பல்லாவில் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில்,

மங்களூருவில் உள்ள சூரத்கல், பாஜ்பே, காவூர் மற்றும் பனம்பூர் ஆகிய இடங்களில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 6 மணி முதல் டிசம்பர் 27ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடையை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த தடை உத்தரவு மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சூரத்கல், பாஜ்பே, காவூர் மற்றும் பனம்பூர் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 29ஆம் தேதி காலை 6.00 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 29ம் தேதி காலை 10.00 மணி வரை மது விற்பனைக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT