பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் சந்திப்பு!
தேசிய தலைநகரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று(டிச.27) சந்தித்துப் பேசினார்.
தேசிய தலைநகரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று(டிச.27) சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் முக்கியத்துவமாக, கேரள அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததையடுத்து, பிரதமர் மோடியை பினராயி விஜயன் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
மேலும். கேரள வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவுப் பகுதிகள் சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து எடுத்துக் கூறினார். இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Advertisement
மேலும், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான அதிவேக ரயில் பாதை திட்டத்திற்கு இன்னும் அரசு அனுமதி வழங்காதது குறித்தும் பிரதமரிடம் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் நினைவுப் பரிசு ஒன்றையும் அளித்துள்ளார்.
தில்லியில் இன்று நடைபெறும் சிபிஎம் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் தலைநகர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.