முகப்பு
இந்தியா

தொழிற்சாலை அருகே பச்சிளம் குழந்தை உடல் கண்டெடுப்பு!

மகாராஷ்டிராவில் பிறந்த பெண் குழந்தை ஒன்று சடலமாக மீட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:12 AM
பகிர்:


தாணே: மகாராஷ்டிரத்தில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம்  தாணே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரின் கோனி கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு பின்னால் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு புதர்களுக்குள் சடலம் கிடப்பதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர், காவல் துறையினருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 
அடையாளம் தெரியாத நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 318-ன் கீழ் உடலை ரகசியமாக அப்புறப்படுத்தியதாக இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக என அந்த அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →