முகப்பு
3 கோடி பயணிகளின் தகவல்கள் விற்பனைக்கு: மறுக்கும் ரயில்வே
இந்தியா

3 கோடி பயணிகளின் தகவல்கள் விற்பனைக்கு: மறுக்கும் ரயில்வே

இந்திய ரயில்வேயின் பயணிகள் 3 கோடி பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக ஹேக்கர்கள் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தியா

3 கோடி பயணிகளின் தகவல்கள் விற்பனைக்கு: மறுக்கும் ரயில்வே

இந்திய ரயில்வேயின் பயணிகள் 3 கோடி பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக ஹேக்கர்கள் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:13 AM
3 கோடி பயணிகளின் தகவல்கள் விற்பனைக்கு: மறுக்கும் ரயில்வே
பகிர்:

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பயணிகள் 3 கோடி பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக ஹேக்கர்கள் விளம்பரம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், அவ்வாறு பயணிகளின் தகவல்கள் திருடப்படவேயில்லை என்று இந்திய ரயில்வே மறுத்துள்ளது.

ஹேக்கர்களுக்கான இருண்ட இணையதளப் பக்கங்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஐஆர்சிடிசி அமைப்பிலும்  சரி, சர்வர்களிலும் அப்படி ஒரு ஊடுருவல் நடைபெறவேயில்லை என்கிறது இந்திய ரயில்வே. 

இது இப்படியிருக்க, ஐஆர்சிடிசி, தனது வணிக கூட்டாளிகளை அனைவரையும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும். அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளது. 

ஹேக்கர்களிடமிருந்து கிடைத்திருக்கும் சில தகவல்களை பரிசோதனைக்கு உள்படுத்தியபோது, அதன் பேட்டர்ன், ஐஆர்சிடிசி தகவல் பதிவு அமைப்பின் பேட்டர்னுடன் ஒத்துப்போகவில்லை என்பது ரயில்வேயின் கூற்று. 

எனவே, விற்பனைக்கு வந்திருக்கும் தகவல்கள் இந்திய ரயில் பயணிகளுடையது அல்ல என்பதும், ஐஆர்சிடிசி சர்வர்களில் எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என்பதும் ரயில்வே அமைச்சக பேச்சாளரால் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
 
முழு கட்டுரையைப் படிக்க →