முகப்பு
இந்தியா

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக 5-ம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) வெளியிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான முதல் 4 கட்ட வேட்பாளர்கள் பட்டியலை திமுக ஏற்கெனவே வெளியிட்ட நிலையில், தற்போது 5-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் பூவிருந்தவல்லி நகராட்சி, திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் நகராட்சி, திருமழிசை பேரூராட்சிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆவடி மாநகராட்சிக்கு பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம் பேரூராட்சி, மணலூர்பேட்டை பேரூராட்சிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நகராட்சி, அதிராம்பட்டினம் நகராட்சி, பேராவூரணி பேரூராட்சி, மதுக்கூர் பேரூராட்சி, பெருமகளூர் பேரூராட்சிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் தெற்கு மாவட்டத்தில் அருப்புக்கோட்டை நகராட்சி, சாத்தூர் நகராட்சி, திருவில்லிபுத்தூர் நகராட்சி, ராஜபாளையம் நகராட்சி, மம்சாபுரம் பேரூராட்சி, வத்திராயிருப்பு பேரூராட்சி, வ. புதுப்பட்டி பேரூராட்சி, சுந்தரபாண்டியம் பேரூராட்சி, எஸ். கொடிக்குளம் பேரூராட்சி, செட்டியார்பட்ட பேரூராட்சி, சேத்தூர் பேரூராட்சிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள், சோலூர் பேரூராட்சி, பிக்கட்டி பேரூராட்சி, கீழ்குந்தா பேரூராட்சி, கேத்தி பேரூராட்சி, ஜெகதளா பேரூராட்சி, உலிக்கல் பேரூராட்சி, அதிகரட்டி பேரூராட்சி, கோத்தகிரி பேரூராட்சி, தேவர்சோலை பேரூராட்சி, ஓவேலி பேரூராட்சி, நடுவட்டம் பேரூராட்சிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மத்திய மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் கிழக்கு மாவட்டத்தில் ஆத்தூர் நகராட்சி உள்பட நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மேற்கு மாவட்டத்தில் மேட்டூர் நகராட்சி உள்பட நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மேற்கு மாவட்டத்தில் காரிமங்கலம் பேரூராட்சி உள்ளிட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை வடக்கு மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சி, திருப்பூர் மத்திய மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி உள்ளிட்ட இடங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.