முகப்பு
இந்தியா

தொழில் நிறுவனங்களுக்கான அவசர கால கடன் 2023-ஆம் ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பு

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான(எம்எஸ்எம்இ) அவசரகால கடனுதவித் திட்டம் (இசிஎல்ஜிஎஸ்) 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2022 at 3:47 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:47 PM

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான(எம்எஸ்எம்இ) அவசரகால கடனுதவித் திட்டம் (இசிஎல்ஜிஎஸ்) 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இதனால், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கு அவசர கால கடனுதவி வழங்கும் திட்டம் 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அந்த திட்டத்துக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும். அதன் மூலம் கூடுதலாக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். அந்தத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இத்திட்டத்தின்கீழ் கூடுதலாக 130 லட்சம் குறு-சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்படுவதன் மூலம், பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிா்கொள்ள இயலும்.

5 நதிகளை இணைப்பதற்கான விரிவான வரைவுத் திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது. கென்-பெத்வா நதிகள் இணைப்புத் திட்டம் ரூ.44,605 கோடியில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.