முகப்பு
இந்தியா

சுகாதாரத் துறைக்கு ரூ.86,200 கோடி: 16% உயா்வு

பொது பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.86,200.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.73,931 கோடியுடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகமாகும்.

Updated On : 2 பிப்ரவரி, 2022 at 3:45 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:47 PM

பொது பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.86,200.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.73,931 கோடியுடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகமாகும்.

நிகழாண்டு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.8,6200.65 கோடியில் ரூ.83,000 கோடி மத்திய சுகாதாரத் துறைக்கும், ரூ.3,200 கோடி சுகாரா ஆராய்ச்சித் துறைக்கும் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைபேசியில் மனநல ஆலோசனை வழங்கும் திட்டமும், தேசிய எண்ம சுகாதார திட்டமும் புதிதாக தொடங்கப்படும் என்றும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

Advertisement

இதன் மூலம் சிறந்த மனநல ஆலோசனைகளை மக்கள் பெறலாம் என்றும் இதற்காக 23 மையங்கள் தொடங்கப்படும் என்றும் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

நாட்டில் மருத்துவ உதவிகளை அளிப்பவா்களின் தகவல்களும், தனித்துவமான மருத்துவ அடையாளம் கொண்டவா்களின் விவரங்களும், சா்வதேச மருத்துவ சேவைகளின் விவரங்களும் இந்த எண்ம சுகாதார திட்டத்தில் பதிவு செய்யப்படும்.

மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.10,566 கோடியில் இருந்து ரூ.15,163 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.